தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (27). இவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் (27) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இந்த நிலையில் லோகநாயகி கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியான ...
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS., நேற்று இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வாணியம்பாடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், ...
முதுகுளத்தூரில் நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருவதால் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கடைகளையும் அகற்ற கோரி பொது மக்களுக்கும் ,வியாபாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர் சில நாட்களுக்கு முன்பாக கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி தலைமையில் டி.எஸ்.பி. சின்னு பாண்டி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் ...
சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் ...
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ.பழனிக்குமார் (ஓய்வு) உள்ளாட்சி தேர்தல் பணிகள், தேர்தல் செலவினங்கள் மற்றும் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகளை காலத்திற்குள் முடித்திடவும் ...
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, ...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஏர்வாடி தர்கா, கடற்கரை மற்றும் புல்லந்தை, மாயாகுளம், இதம்பாடல், பனையடியேந்தல், ஆலங்குளம், மல்லல், நல்லிருக்கை, மல்லல் மட்டியரேந்தல் மற்றும் இளங்காக்கூர், வளநாடு பகுதிகளில் 23.08.2023 அன்று காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது ...
கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள வடசித்தூரை சேர்ந்தவர் ரங்கசாமி என்ற கன்னையன் .இவரது மனைவி துளசி அம்மாள்( வயது 73) இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.துளசி அம்மாள் தனியாக வசித்து வந்தார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த துளசியம்மாள் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்எண்ணையை ...
கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 25) இவர் நேற்று நீலாம்பூரில் ரோட்டை கடந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...
தர்மபுரியைச் சேர்ந்த ஈஸ்வரன் – விமலா தம்பதியினர். கோவை, தடாகம் பகுதி அருகே உள்ள செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்வரன் செங்கல் சூளையில் மண் கலக்கி கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த இரண்டு காட்டு யானைகள் அதில் ஆண் காட்டு யானை ஈஸ்வரனை தாக்கியது. உடனே அருகில் ...













