காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜெ. ஈசன் தலைமையில் நடுவர் குழுவினர் போட்டியை சிறப்பாக நடத்தினர்.மாநில துணை பொது செயலாளர். சண்முகப்பிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு ...
இந்திய அளவில் சதுரங்க விளையாட்டை போன்ற பயர் கோ விளையாட்டுகள் மேலை நாடுகளில் மிக பிரபலம் தற்போது சமூக வலைதளம் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பயர் கோ விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றது, இதில் பீகாரை சேர்ந்த பயர்கோ விளையாட்டு கழகத்தினர் தேசிய அளவில் பயர்கோ விளையாடடு போட்டிகளை மாணவ,மாணவிகள், மத்தியில் நடத்தி வருகின்றனர் , ...
பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ...
இந்திய நாட்டின் சார்பில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று திருச்சி திரும்பிய தடகள வீரரும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகருமான ராஜேஷ்க்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ...
சென்னை: இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன் ...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது ...
உலக புகைப்பட தினம் நாளை கொண்டாடப்படும் நிலையில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கோபி பசுமை போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முருகன் புதூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். ...
ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் ...
திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தேசிய கல்லூரியின் உள்விளையாட்டாரங்கத்தில் நேற்று நடைபெற்றது.சிலம்பம் உலக சம்மேலனத்தின் சார்பில் நடந்த இந்த போட்டிகளில் இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை கத்தார் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ...
இந்தியாவின் இரட்டையர் பிரிவு டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த ரோஹன் போபண்ணா, ஒலிம்பிக் பதக்கத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்தார். இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜியுடன் இணைந்து ...