கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்
காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில் புதிதாக கிரிக்கெட் அகாடமி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது

காரமடை வட்டம் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரில்
26.08.2023 அன்று புதிதாக கிரிக்கெட் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது,

விழாவில் சிறப்பு விருந்தினராக ஐ,பி,எல் விளையாட்டு வீரரும் டி,என்,பி,எல் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணியின்
கேப்டனும் மாகிய
ஹரி நிஷாந்த் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தார் ,

மாணவ/மாணவிகள் இடையே விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி சிறப்புரையாற்றிய
ஹரி நிஷாந்த் எதிர்கால இந்தியாவின் சிறப்பான விளையாட்டு வீரராக திகழ மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்

இவ்விழாவிற்கு கல்லூரி அறங்காவலர் M.சண்முகம் அவர்கள் தலைமை வகித்தார்,

கல்லூரி முதல்வர் முனைவர் V.சுகுணா முன்னிலை வகித்தார்,

சிறப்பு அழைப்பாளர்களாக S.சுரேஷ் குமார் துணை செயலாளர் கோயம்புத்தூர் கிரிக்கெட் சங்கம்,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்வு குழு உறுப்பினர் S.P.செழியன்,
திருமதி. லதா செழியன் ,
சங்கர் கணேஷ் ,
ஈஸ்வர மனோகர், மற்றும்
M.ஜெய பாண்டியன் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்

விழாவின் ஒரு பகுதியாக அகில இந்திய கால்பந்து சங்கம் 7-A கால்பந்து போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும்,

பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது

பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,
கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரபள்ளி மாணவ மாணவிகளும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்