தமிழ்நாட்டில் ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த ...
சென்னையில் இன்று வணிக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை ரூ.10.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.2,916.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரில் எந்த வித மாற்றமும் இல்லை. வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் ...
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஈரான் இடையிலான போரால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. எனினும் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது. உலகில் அதிவேகமாக வளரும் பொருளாதார ...
தமிழ்நாட்டில் குடும்பங்களின் அன்றாடத் தேவைகளுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளதால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அரிசி மற்றும் சர்க்கரை: மக்களின் அடிப்படை உணவான அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ...
இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை அல்லது திறன் பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. நாட்டின் இளைஞர்களில் கணிசமான பகுதியினர் கல்வியில் இருந்து வேலை கிடைக்காமல் இருக்கிறது. இவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களை பெற முடியாத நிலை இருப்பதையே இந்த நம்பர் ...
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரீ பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை சுமார் 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்காயம், ...
வங்கிகளில் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான ஊக்கத்தொகை (PLI) பாகுபாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய போராட்டக் களத்தில் இறங்க வங்கி ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ஒன்பது முக்கிய வங்கி சங்கங்களின் (AIBEA, AIBOC, NCBE) கூட்டமைப்பான ‘யுனைடெட் ...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் , இந்த நடவடிக்கையானது ஈரானின் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட ...
இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரம், வேளாண் வளர்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றில் தென்னை முக்கியப் பங்கு வகிக்கிறது.கற்பக விருட்சம்’ எனப் போற்றப்படும் தேங்காய், உணவு, பானம், மருந்து, நார், மரப்பொருள், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான வளங்களை வழங்குகிறது. இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாக தேங்காய் சாகுபடி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்துறையைச் சார்ந்து சுமார் 3 கோடி ...
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2-வது அணு உலைக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒரு நாள் பராமரிப்பு பணிக்குப்பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. கூடங்குளத்தில் மன்னார் வளைகுடா கடலை ஒட்டி, தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் மற்றும் 2-வது அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. ...













