பிச்சை எடுத்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவசாயிகள்…13வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்..!

தாராபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியில் நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு நிலம் கொடுத்த 170 விவசாயிகள் பிச்சை எடுத்து அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி, 13,வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதாங்கால் நீர்த்தேக்க அணை கட்டுமான பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 13-வது நாளாக கோனரிபட்டியில் இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிச்சை எடுத்து தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் தெரிவிக்கையில்:- பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர்தேக்க அனைக்கு கட்டுமான பணிக்காக150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் கடந்த 1997-ம் ஆண்டு கையகப்படுத்தி 2000-ம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர். அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீட்டுத் தொகை கேட்டு 2003-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் தாராபுரம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு 24 ஆண்டுகளாக இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகின்றனர். குறைந்தபட்ச முழு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளின் வழக்கை மேல் முறையீடு செய்துள்ளனர். மேல் முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்களிடம் பிச்சை எடுத்து பிச்சை எடுத்த காசை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து எங்களது வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் 24 ஆண்டு காலமாக லஞ்சம் எதுவும் கொடுக்காததால் விவசாயிகளை அதிகாரிகள் வஞ்சிப்பதாகவும் இனியாவது பிச்சை எடுத்த காசில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க தயாராக இருக்கிறோம் எனக் கூறி ஒவ்வொருவரிடம் பிச்சை எடுத்து பணம் திரட்டி வருகிறோம் என இவ்வாறு தெரிவித்தார்..