லேண்டரிலிருந்து வெளியே வந்து மூன் வாக் செய்த ரோவர்… அடுத்தடுத்து அசத்தும் சந்திராயன் 3 ..!

ந்திராயன் 3 லேண்டரிலிருந்து ரோவர் இறங்குவதற்கு முன், சூரியனை நோக்கி ரோவரின் சோலார் மின் தகடு திரும்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விக்ரம் லேண்டரின் சாய்வு தளத்திலிருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பி உள்ளதாகவும், இஸ்ரோ சற்று முன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பை தெரிவித்துள்ளது.

ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியை பெறுவதற்காக, சோலார் மின் தகடு சூரியனை நோக்கி தற்போது திரும்பி உள்ளதாக, இஸ்ரோ வெளியிட்டுள்ள அந்த செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாய்வு தளம் மூலம் லேண்டரிலிருந்து ரோவர் மிக எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளது.

சந்திராயன் மூன்று திட்டத்தில் மொத்தம் 26 வரிசைப்படுத்துதல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.