கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..!

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் நடத்திய
தட்டம்மை நோய் தடுப்பூசி முகாம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் இராமநாதபுரம் சுகாதாரப்பிரிவு இந்திய குழந்தைகள் மருத்துவக்கழகம் இணைந்து நடத்திய தட்டம்மை நோய் குறித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ரோட்டரி சங்கம் தலைவர் டாக்டர் கபிர் தலைமை தாங்கினார்.செயலாளர் எபன் வரவேற்றார். தட்டம்மையால் ஏற்படும் விளைவுகள் மற்றும் தடுப்பூசியால் போடுவதால்ஏற்படும் நன்மைகள் பற்றிய கருத்துக்களை கீழக்கரை தலைமை மருத்துவர் டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் திருப்புல்லாணி வட்டார மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் ஆகியோர தலைமை உரையாற்றினார்.
கருத்தரங்கின் நோக்கத்தை குழந்தை நல மருத்துவர் அய்சத்துல் நசிதா எடுத்துரைத்தனர்.இம்முகாமில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளியின் தலைமையாசிரியர் மேபல் ஜஸ்டஸ் , மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ரஹ்மத் நிஷா, மருத்துவர் ராம்பாபு, ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியன், டாக்டர் சுந்தரம், மற்றும் நூகு,சிவகார்த்திக்,சபிக், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள்,மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் செவிலியர்கள், மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.இம்முகாமில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.