செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வரவுள்ள செய்தி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.செப்டம்பர் 4-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையை முன்னிட்டு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என ...
தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ...
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி ஊக்கு விப்புத் திட்டம் (சிஏஎஸ்) செப்.1-ம் ...
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. பொது பிரிவினருக்கு இணையவழியாக நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கு நேற்று நேரடியாகவும் நடைபெற்றது. பொது கலந்தாய்வு இணையதளம் வழியே நேற்று தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ...
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்குப் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. இதுவரை மொத்தம் 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் ...
கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. குறிப்பாகத் தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.அரசுப் பள்ளிகள் ...
சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மேம்படுத்தவும், காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு மாற்றாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக ...
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இத்திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்த நிறுவனங்களுக்குத் தமிழக அரசு முக்கிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. தி.மு.க ஆட்சிக்காலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டு, ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அமைந்துள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை பள்ளிக்கல்வி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி அகழாய்வு, ஆய்வு அறிக்கை, இந்திய தொல்லியல் ...
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் (Climate Science) ஆகிய நவீனப் பாடங்களைக் கொண்டு வருவது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ...













