பெண்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் லாட்லி பெஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வழக்கமான தொகையுடன் சிறப்புப் பரிசும் சேர்த்து வழங்கப்படவுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மாதத் தவணைத் தொகையான ரூ. 1,500-னுடன், ரக்ஷா பந்தன் பரிசாக கூடுதலாக ரூ. 250 சேர்த்து வழங்கப்படவுள்ளது. ...
நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை விரைந்து கொண்டு சேர்க்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.நேபாளம் – திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டதால், மூன்று மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ...
நேபாளம்- சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அப்பகுதியில் மீண்டும் ஒரு மிக பெரிய வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மலைப்பகுதியில் புதிதாக உருவான தடுப்பு அடுத்த 3 நாட்களுக்குள் உடைந்து வெள்ளம் ஏற்படலாம் என சீனா எச்சரித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி பனிப்பாறை ...
சிறை கைதிகள் மத நம்பிக்கைக்காக வளர்க்கும் தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்லத்துரை பாளை சிறையில் உள்ளார். அவர் மத நம்பிக்கை அடிப்படையில் தலைமுடியை வளர்த்து வருகிறார். ...
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க முதல்வர் விஜய் உத்தரவின்படி ஆதவ் அர்ஜூனா உட்பட 4 அமைச்சர்கள் நேற்று டெல்லி விரைந்தனர்.மேலும் கும்பகோணத்தில் இருந்து சென்ற 36 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாள வெள்ளத்தில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் ...
குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறு என ஐகோர்ட்டில் முதல்வர் தரப்பு விளக்கமளித்துள்ளது. திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நிராகரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வாக்காளர்கள் தினேஷ், ...
தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். அதோடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை ...
நேபாளத்தில் சிக்கிய எங்கள் குழுவினரின் துயரத்தில் பங்கெடுத்து கொள்கிறேன் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திற்கு இன்று காலை பெரும் துயரமான நாளாக மாறியுள்ளது. நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஓடும் கோசி ஆற்றில் இன்று காலை 8.30 மணியளவில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளம் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 24ஆம் தேதி உயர்கல்வித்துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குறுக்கிட்ட நிதியமைச்சர் மரிய வில்சன், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது கடுமையான லஞ்சக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது பள்ளிகளுக்கு அனுமதி வழங்க திமுக ஆட்சியில் லஞ்சம் ...











