அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த நீதிமன்றம் ...

பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் ...

சென்னை: கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும், என்று அதிமுக பொதுச் ...

சனாதனத்துக்கு எதிராக பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு தி.மு.க., எம்.பி ஆ.ராசா ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில இந்து முன்னணி நிர்வாகிகள் கோ வாரண்டோ வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த ...

கரூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பை வெளியிடுவேன் என கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். கரூரில் அவர் நேற்று பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் அண்ணாமலை நான் பெண் என்பதால் பிழைத்துக் கொண்டு போகட்டும் என அவர் விட்டு வைத்திருப்பதாக சொல்லியுள்ளார். இதை சொல்ல அண்ணாமலை யார் என நான் ...

அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் அறிவித்தார். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலங்கானாவில் நவம்பர் ...

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த 2022 செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், இப்போது ஏழை, நடுத்தர மக்கள் கூட, இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ...

காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் ...

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள எ.வ வேலுவிற்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளிலும் 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். திமுகவின் பசையான அமைச்சர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் ...

சென்னை: பருவமழையின்போது, மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு மற்றும் சேதமடைந்த குடிசை, வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக். 21-ம் தேதி தொடங்கியது. அன்றில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக். ...