சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம், வெளிநாட்டு கரன்சி பிடிப்பட்டது. இது தொடர்பாக 6 ேபரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய் விமானம் வந்தது. பின்னர் அந்த விமானம் ஐதராபாத்துக்கு செல்ல வேண்டும். எனவே, விமான ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு சீட்டுக்கு அடியில் ...

தமிழகத்தில் தற்போது கொரோனா 3-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என்று பெற்றோர்கள் ...

பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டால் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கண்ணீர் சிந்துவதாக, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ...

உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். உக்ரைன் எல்லை பெலாரஸில் ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், பிரிட்டன் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. ...

கொரோனா காலகட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு கூட புதிய ஆடைகள் வாங்க முடியாமல் எங்கு அதிகம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என தேடி தேடி கடை கடையாக ஏறி இறங்கிய நாம் எங்கே? 46 ஆயிரம் ரூபாய்க்கு ஒத்த டி சர்ட்டை அணிந்து கொண்டு உலா வரும் அர்ஜூன் கபூர் எங்கே? என்னது ஒரு டி ஷர்ட் 46 ...

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் ...

கோவை: வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு காண பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் “பிரஸ் கவுன்சில்” அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும்,அங்கீகார ...

கோவை: ”இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசியல் ரொம்ப ‘காஸ்ட்லி’யாக இருக்கிறது. எல்லாவற்றிலும் பணம் விளையாடுகிறது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவையில் உள்ளாட்சி தேர்தல் இறுதி நாள் பிரசாரத்தில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:இந்த தேர்தலில் தி.மு.க., 2,000 ரூபாய் பணம், ஒரு ஜோடி வெள்ளிக்கொலுசு, ஒரு ‘ஹாட்பாக்ஸ்’ ஆகியவற்றை கொடுத்து உள்ளாட்சியை பிடித்து ...

சூலுார் : அரசூர் அருகே, அவிநாசி ரோட்டில் மேலும் இரு இடங்களில் மேம்பாலம் கட்டுவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். சாலைப் போக்கு வரத்து உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் விதமாக, செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை (எண்:544) ஆறுவழிச்சாலையாக மாற்றப்பட்டது. கருமத்தம்பட்டி, கணியூர் உள்ளிட்ட பல இடங்களில் ...