கோவை: வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு காண பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் இந்த இணையத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட முகவரியில் அறிந்து கொள்ள இயலாதவர்கள் கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
Leave a Reply