டெல்லி: பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட் சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்கும் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை யூபிஐ தளத்திற்குள் இணைக்க முடியும். யூபிஐ பேமெண்ட் சேவை நமது பொருளாதாரத்தில் நிதி நிலைமையை ஊக்குவிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ...

சென்னை: மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி புகார் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக கூறி பி.புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். போலிக்கணக்கு காண்பிக்கப்பட்டு ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக ...

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமது அதிரடி நடவடிக்கைகளால் அறநிலையத்துறையில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இவருடைய மகள் 2 நாட்களுக்கு முன்பு 6 வருடங்களாக காதலித்து வந்த இளைஞர் சதீஷை திருமணம் செய்துகொண்டார். இவர் கர்நாடகா பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தமிழக இந்து அறநிலையத்துறை ...

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ஆம் தேதி கொண்டப்படுகிறது. அதன்படிநேற்று  நாடு முழுவதும் உலக மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மும்பையில் பெண் காவலர்களுக்கு ...

விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து சீனாவின் யூனியன் பே மூலம் வங்கிகள் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. விசா மற்றும் மாஸ்டர் கார்டு பரிவர்த்தனை நிறுத்தத்தை தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் சீனாவின் “யூனியன் பே” மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ...

ராஜ்யசபா உறுப்பினர்களான ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் என பல தலைவர்கள் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளதால் மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், கேரளா, அசாம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாகவுள்ள எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பஞ்சாபில் ...

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுப்பு தெரிவித்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் திடீர் தகவலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், இன்று முதல் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தொடுக்கப்பட்ட வழக்கு காரணமாக 3 ஆண்டுகளாக ஜெயலலிதா மரணம் ...

தமிழகத்தில் ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்பு நன்கு குறைந்துள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 30,000 ஆக பதிவான நிலையில் தற்போது 200க்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் நோய் பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி, கடந்த பிப்ரவரி மாதம் 1 ...

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் 27 பேரை அந்த கல்லூரியில் படிக்கும் சீனியர்களால் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெண்ணிற லேப் கோட்டுடன், முக கவசம் அணிந்திருக்கிறார்கள். ...

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் செயல்பட்டு வரும் Spic தனியார் உரத் தொழிற்சாலையின் பயன்பாட்டுக்காக ரூ.150.4 கோடி செலவில் 75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து இன்று வைத்தார். தினமும் 22 மெகா வாட் என ஆண்டுக்கு 42 மி.யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுடையது மின்நிலையம் என்று கூறப்படுகிறது. உற்பத்தியாகும் ...