அடேங்கப்பா! போனிகபூர் மகன் அணிந்திருக்கும் ஒரு டி-ஷர்ட்டின் விலை இவ்வளவா..? அப்படி என்னதான் ஸ்பெஷல்..!

கொரோனா காலகட்டத்தில் தீபாவளி பொங்கலுக்கு கூட புதிய ஆடைகள் வாங்க முடியாமல் எங்கு அதிகம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என தேடி தேடி கடை கடையாக ஏறி இறங்கிய நாம் எங்கே?

46 ஆயிரம் ரூபாய்க்கு ஒத்த டி சர்ட்டை அணிந்து கொண்டு உலா வரும் அர்ஜூன் கபூர் எங்கே? என்னது ஒரு டி ஷர்ட் 46 ஆயிரம் ரூபாயா……யாருப்பா அவர் எங்களுக்கே அவர பாக்கனும் போல இருக்கேன்னு என்று யோசிக்கிறீர்களா? வாருங்கள் யார் என்று பார்ப்போம்…வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரின் மகன் தான் இந்த அர்ஜூன் கபூர். போனி கபூரின் முதல் மனைவியான மோனா ஷவுரி-க்கும் போனிகபூருக்கும் பிறந்தவர் அர்ஜூன். கல் ஹோ நா ஹோ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார். 2012-ம் ஆண்டு வெளியான இசாக்ஸாதே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நாயகனாக வளர்ந்து நிற்கிறார். திறமையை வைத்து கொண்டு ரோடு ரோடாக, இயக்குநர், தயாரிப்பாளர்களின் அலுவலக, அலுவலகமாக அலைந்து திரியும் நடிகர்களுக்கு மத்தியில், தனது குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி மேலும் மேலும் சினிமாவில் வளர்ந்து வரும் வாரிசுகளின் வருகை தான் இங்கு அதிகமாகவுள்ளது.

குறிப்பாக பாலிவுட்டில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே கையில் வைத்துக் கொண்டிருப்பதாகவும் நெப்போட்டிசம் தலைவிரித்தாடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் விதமாக தனது அப்பாவின் செல்வாக்கை வைத்து இன்று போனி கபூரின் மகன் அர்ஜூன் மற்றும் மகள் ஜான்வி கபூர் என அனைவருமே கொடி கட்டி பறந்து வருகின்றனர். 2 ஸ்டேட்ஸ், கி அண்ட் கா, ஹாஃப் கேர்ள்ஃபிரண்ட், நமஸ்தே இங்கிலாந்து, பானிபட் உள்ளிட்ட பல ஹிட்படங்களை கொடுத்த அர்ஜூன் கபூருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகம். இந்த பேமஸை விட அர்ஜூன் கபூர் ஃபேமஸ் ஆனது அவரது காதலால் மட்டுமே. 36 வயதாகும் அர்ஜூன் 48 வயதாக மலைகா அரோராவை காதலித்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் தான் சில தினங்களுக்கு முன்பு மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தது.

இருவரும் சேர்ந்து ஒன்றாகவே அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். இடையில் இவர்கள் இருவருக்கும் ப்ரேக் அப் ஆகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இல்லை இல்லை இல்லவே இல்லை என ஓடோடி வந்து விளக்கம் அளித்திருந்தார் அர்ஜூன். இந்த நிலையில் அர்ஜூன் ஊதா நிறத்தில் அணிந்து வலம் கொண்டிருந்த ஒரு பிரிண்டட் டி ஷர்ட் தான் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதில்லென்ன இருக்கிறது எனக் கேட்டால், நாம் ஒரு டி ஷர்ட் எடுக்க வேண்டும் என்றால் 100 முதல் அதிகபட்சம் 500 ரூபாய்க்குள் எடுப்போம். சற்று பணக்காரர்கள் என்றால் அதிகப்பட்சம் பிராண்டட் எனக் கூறி 3000 ரூபாய்க்கு எடுப்பார்கள். ஆனால் அர்ஜூனோ அதற்கும் மேலே சென்று 46 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு டி ஷர்ட்டை அணிருந்தது தான் அனைவரது வாயையும் பிளக்க வைத்துள்ளது.