குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்: கோவை சாலையில் வெள்ளப்பெருக்கு – குழிகளில் நிரம்பியதால் சிரமத்தில் வாகன ஓட்டிகள்    கோவை தடாகம் சாலையில் இடையர்பாளையத்தில் இருந்து வடவள்ளி செல்லும் சாலையில் இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாக்கடை வடிகால் அமைப்பதற்காக சாலையோரம் ...

கோவையில் கடந்த சில நாட்களாக சாரல் மழையும், அவ்வபோது கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிறுவாணி ஆற்றில் இருந்தும், நொய்யல் ஆற்றில் இருந்தும் வெள்ளம் கரைபுரண்டு வருகிறது. இதில் நொய்யலின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில் அதிக அளவு நீர் வெளியேறுகிறது. இதனால் பேரூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப் ...

கேரள பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி உள்ளது. இந்த அணையில் இருந்து கோவை மக்களின் தேவைக்காக குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள வனப்பகுதியில் இருந்தாலும் தண்ணீர் எடுக்கும் உரிமை தமிழகத்துக்கும் அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடம் உள்ளது. இதற்காக தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ஆண்டு தோறும் பராமரிப்பு கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது ...

கோவை அருகே உள்ள சூலூர் பி.டி.ஓ காலனி சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 40 ) சமையல்கலைஞர் (செப்)இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகன் மகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4மாதங்களுக்கு முன்பு இவர் ஒரு விபத்தில் சிக்கி வலது காலில் முறிவு ஏற்பட்டது.அதன் பின்னர் சமையல் தொழிலுக்கு சரிவர செல்ல முடியவில்லை. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நியூஸ் ஸ்கீம் ரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் சந்தோஷ் ( வயது 17 )இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை மெயின் ரோட்டில் ஒரு பேக்கரி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் சந்தோஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் தாஸ் என்ற மரிய சூசை ,இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 36 )நேற்று இவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பாத்திரத்துக்குள் மறைத்து வைத்திருந்த 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையொட்டி முத்துலட்சுமி ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் ( 29 ) தம்பு என்ற உதயகுமார் (36 |பிரபாகரன் ( 33 ...

டாஸ்மாக் சரக்கு ஏற்றி வந்த லாரி ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கி பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.   கோவை மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த சில நாட்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டு வரும் தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தை விட 1 ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை நீலிபாளையம் நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 36). டிரைவர். இவரது 3 வயது மகன் ரித்திஷ். இந்த நிலையில் நீலிபாளையம் நால்ரோடு பிரிவில் உள்ள முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவுக்காக கோவிலை தூய்மைப்படுத்துவதற்காக தண்ணீர் லாரி அங்கு வரவழைக்கப்பட்டது. லாரி கோவிலை வந்தடைந்ததும் முன் ...

கோவை மாவட்டம், அன்னூரை அடுத்துள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து கஞ்சப்பள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் பணிக்கு சென்று ...