சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.03 அடியாக அதிகரிப்பு..!!

கேரள பாலக்காடு மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி உள்ளது.
இந்த அணையில் இருந்து கோவை மக்களின் தேவைக்காக குடிநீர் எடுக்கப்பட்டு
வருகிறது. கேரள வனப்பகுதியில் இருந்தாலும் தண்ணீர் எடுக்கும் உரிமை
தமிழகத்துக்கும் அணையை பராமரிக்கும் உரிமை கேரளாவிடம் உள்ளது. இதற்காக
தமிழகம் சார்பில் கேரளாவுக்கு ஆண்டு தோறும் பராமரிப்பு கட்டணம்
செலுத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அணைக்கு வரும்
தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று 176 மி.மீட்டர் மழை பெய்து
உள்ளது. இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.03 அடியை எட்டி
உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது. அணையில்
இருந்து 10 கோடியே 70 லட்சத்து 14 ஆயிரம் லிட்டர் தண்ணீர்
எடுக்கப்பட்டது. அணையில் இருந்து 45 அடியை தாண்டினால் மட்டுமே கேரள அரசு
அதிகாரிகள், அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என குடிநீர்
வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.