கோவை தொண்டாமுத்தூர் அருகே வண்டிக்காரனூரில் உள்ள கொய்யா தோப்பில் பணம் வைத்து சீட்டாடுவதாக தொண்டாமுத்தூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் பழனியாண்டி அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது பணம் வைத்து சீட்டாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராம் பிரகாஷ் ( 29 ) தம்பு என்ற உதயகுமார் (36 |பிரபாகரன் ( 33 )கவியரசன்( 29| அருண்குமார் (28) பிரிதிவிராஜ் ( 27 | அருண் குமார் (30 | மிதுலேஸ் (19) தனபால் (30)மற்றொரு அருண்குமார் ( 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சீட்டும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் ஜாமினில் விடுவிக்க செய்யப்பட்டனர்.