வீட்டில் பாத்திரத்தில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண் கைது..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் தாஸ் என்ற மரிய சூசை ,இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 36 )நேற்று இவரது வீட்டில் சந்தேகத்தின் பேரில் வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பாத்திரத்துக்குள் மறைத்து வைத்திருந்த 1400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையொட்டி முத்துலட்சுமி கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.