15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி

புதிய துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களை நியமனம் செய்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பின்வருபவர்கள். துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரன் அவர்கள் மாவட்டக் கழகச் செயலாளராக நியமனம் செய்யப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும். பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள், பணிகளை மேற்கொள்வார்கள். கழகத் தோழர்கள். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.