ஈரோடு மாவட்டம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை ...

தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ...

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிராமத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் கிராமத்துக்கு இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ். ...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து 6 வது நாளாக போர் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் 18000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் ...

காசாவில் 50,000 கர்ப்பிணிப் பெண்களுக்கு குடிநீர் கூட இல்லை என்று ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவில் 34 சுகாதார நிலையங்கள் இஸ்ரேல் படையால் தாக்கப்பட்டன. 11 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையில், ஜெருசலேமில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. முன்னதாக ஹமாஸ் தாக்குதலில் 27 அமெரிக்கர்கள் ...

மேட்டூர்/தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததாலும், தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த 10-ம் தேதி நிறுத்தப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தாமரைக்கரை, தட்டக்கரை, பர்கூர், சென்னம்பட்டி வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்(70). இவர் இருட்டிபாளையம் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது விவசாய  தோட்டத்தில் தனது மனைவி சின்னத்தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார். காலை தோட்டத்திலிருந்து இருட்டிபாளையத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று பாலை ஊற்றிவிட்டு மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக  பள்ளத்தின் வழியாக ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வனப்பகுதியில் உள்ள சாலைகளில் இரவு நேரங்களில் புலிகள் அவ்வப்போது நடமாடுகின்றன. இந்த நிலையில் அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலை கிராமத்திற்கு செல்வதற்காக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. குன்றி வனச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் ...

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், இருப்பு வைத்து இருப்பவர்கள், சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ...