கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிராமத்தில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் கிராமத்துக்கு இந்த மேல்நிலை தொட்டியில் இருந்து தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து எஸ். எஸ். குளம் கிராம பஞ்சாயத்தின் உதவி இயக்குனர் பஷீர் அகமது ,வட்டார வளர்ச்சி அலுவலர் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது .இதில் குடிநீர் தொட்டிக்குள் எலும்புக்கூடுகள் கிடந்தது தெரிய வந்தது எலும்புக்கூடுகள் இதில் எப்படி விழுந்தது? என்று தெரியவில்லை. இருப்பினும் குடிநீரை சுத்தம் செய்யும் பொருட்டுகுடிநீர் முழுவதையும் அகற்றினர். அந்த நீர் வெளியேற்றிய பின் புதிய குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது .குடிநீர் தொட்டியில் எலும்பு கூடு கிடந்தது அந்த பகுதி மக்களிடம் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது..