சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர்.!

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம்,கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
பின்பு மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்களை கைது செய்தது, வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.