ஆபரேஷன் அஜய்… இஸ்ரேலில் இருந்து 230 இந்தியர்களுடன் முதல் விமானம் வருகை டெல்லியில் மத்திய மந்திரி ராஜீவ்சந்திரசேகர் நேரில் வரவேற்பு..!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து 6 வது நாளாக போர் நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 2000க்கும் அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் 18000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தில் பதிவு செய்தவர்கள் அடுத்தடுத்த விமானங்களில் தாயகம் அழைத்து வரப்படுவர். .

இந்த “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் அழைத்துவரப்படுவர்.  தற்போது, இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டது  எனவும் அதில் பயணிப்பவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது, அவர்கள் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது .அந்த வகையில், அக்டோபர் 7 ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையை இஸ்ரேலில் போர் காரணமாக, திடீரென நிறுத்திவிட்டது. இதனால் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாமல் போன பயணிகளுக்கு முதலில் திரும்பி வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீனம் ஹமாஸுடன் தற்போது போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளனர். இதுவரை நடைபெற்ற போரில், இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. ஒரே ஒரு இந்தியர் மட்டும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனஇந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். அதுமட்டுமின்றி இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் வந்தனர். இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு வந்த முதல் மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. குறிப்பாக இஸ்ரேலில் இருந்து வந்த முதல் மீட்பு விமானத்தில் 17 மாணவர்கள் உட்பட 21 தமிழர்கள் வருகை புரிந்தனர்.டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார்.