தென் இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 2. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் ...
நடைமுறையில் Telegram செயலியை பயன்படுத்தி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. முதலில் Whats App-ல் Partime Job என்று பதிவுகளை அனுப்பி பின்னர் Telegram குரூப்பில் இணைய கூறுகிறார்கள். பின்னர் Google Map, Youtube, Hotel Restaurants போன்றவற்றிற்கு ஆன்லைன் மூலமாக Ratings Reviews கொடுத்தால் ஒரு ரேட்டிங்ஸ்க்கு 150 ரூபாய் என்று கொடுக்கப்படுகிறது. பின்னர் ...
வத்தலகுண்டு அருகே, விபத்தில் மூளை சாவு அடைந்து, உடல் உறுப்பு தானம் செய்த, பூ விவசாயின் உடல் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, குன்னுத்துபட்டியை சேர்ந்த, பூ விவசாயி வேலுச்சாமி (55) இவர், வெள்ளிக்கிழமை இரு சக்கர ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் தோலம்பாளையம் அருகே நீலாம்பதி வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ...
திருவனந்தபுரம்: கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் கடந்த மாதம் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. கேரள மாநிலம் கொச்சி நகரின் மையப்பகுதியான களமசேரியில் ஒரு அரங்கத்தில் யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெபக் கூட்டம் கடந்த 27ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் ...
டெல் அவிவ்: காசா மீதான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காசா மீதான ஏவுகணை தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதமாக யுத்தம் தொடர்ந்து வருகிறது. முதலில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்த நிலையில், அதற்கு இஸ்ரேல் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. காசா ...
திருவனந்தபுரம்: எஜமானர் இறந்தது தெரியாமல் சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக வளர்ப்பு நாய் காத்துக்கிடக்கிறது. கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில், தன் எஜமான் பூமியை விட்டு விடைபெற்றது தெரியாமல் ஏக்கத்துடன் காத்துக்கிடக்கிறது. நாய்கள் நன்றியுள்ள பிராணி.. தனக்கு உணவளித்தவர்களை ஒரு போதும் தாக்காது. தன் மீது அன்பு காட்டுபவர்கள் மீது, அவர்கள் ...
மேட்டுப்பாளையம் காதர் மஹால் எதிர்ப்புறம் உள்ள வெண்ணல் வீதியில் பலத்த மழை காரணமாக வீடு சுவர் இடிந்து விழுந்தது மூன்று தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது மேலும் கனமழையால் காதர் மஹால் அருகில் உள்ள வெண்ணல் வீதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரது வீடு ...
சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு இன்று முதல் அணலுக்கு வந்துள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகித வாகனங்கள் அதிகரிக்கின்றன. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை முற்றிலும் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்தன. இதைக் கருத்தில் கொண்டு ...
வேகமாக பைக் ஓட்டி அந்த சாகசங்களை ட்வின் த்ராட்டில் எனும் யூடியூப் சேனலில் வெளியிட்டு இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தாமல் எனும் பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் பைக் விபத்துக்குள்ளாகி அவரும் கீழே ...













