சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பெற்று வண்டி ஓட்டுவேன்- டிடிஎஃப் வாசன் அடாவடி பேச்சு.!!

வேகமாக பைக் ஓட்டி அந்த சாகசங்களை ட்வின் த்ராட்டில் எனும் யூடியூப் சேனலில் வெளியிட்டு இளைஞர்கள் மற்றும் சிறார்கள் மத்தியில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன்.

கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது தாமல் எனும் பகுதியில் கட்டுப்பாட்டு இழந்த நிலையில் டிடிஎஃப் வாசனின் பைக் விபத்துக்குள்ளாகி அவரும் கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டார்.

பலமுறை டிடிஎஃப் வாசனுக்கு போக்குவரத்து துறை போலீசார் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் அதிவேகமாக வண்டியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நிலையில், சாலை விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன் சுமார் 40 நாட்கள் சிறைவாசம் அடைந்த நிலையில், நேற்று கண்டிஷன் பெயிலில் வெளியே வந்தார்.

இத்தனை நாட்கள் சிறையில் இருந்தும் டிடிஎஃப் வாசன் கொஞ்சம் கூட திருந்தியது போலவே தெரியவில்லை. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், டிடிஎஃப் வாசன் பைக் ஓட்ட மாட்டார் என அவரது வழக்கறிஞர் வாதாடிய நிலையில் தான் கண்டிஷன் வெயில் கிடைத்தது. ஆனால் வெளியே வந்து பேட்டி அளித்த டிடிஎஃப் வாசன் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை பெற்று வண்டி ஓட்டுவேன் என திமிராக பேசியுள்ளார். இந்தியாவில் அதற்கு வாய்ப்பே கிடையாது என போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், தனது ரசிகர்களுக்கு கை அசைத்து வந்த டிடிஎஃப் வாசன் பத்திரிகையாளர்களிடம் கெத்தாக பேசிய நிலையில், அவரது அம்மா கண்டிஷன் பெயில்ல வந்திருக்க, வேகமா நட, வாய மூடிக்கிட்டு வா, வீட்டுக்கு போகலாம் என அதட்டி காருக்குள் ஏற்றிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

ஆரம்பத்திலேயே இப்படி கண்டித்து வளர்த்திருந்தால் டிடிஎஃப் வாசன் இப்படி வளர்ந்திருக்க மாட்டாரே என நெட்டிசன்கள் அவரது அம்மாவையும் கலாய்து வருகின்றனர்.