பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS சைபர் விழிப்புணர்வு‌..!

நடைமுறையில் Telegram செயலியை பயன்படுத்தி குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. முதலில் Whats App-ல் Partime Job என்று பதிவுகளை அனுப்பி பின்னர் Telegram குரூப்பில் இணைய கூறுகிறார்கள். பின்னர் Google Map, Youtube, Hotel Restaurants போன்றவற்றிற்கு ஆன்லைன் மூலமாக Ratings Reviews கொடுத்தால் ஒரு ரேட்டிங்ஸ்க்கு 150 ரூபாய் என்று கொடுக்கப்படுகிறது. பின்னர் Telegram குருப்பில் உள்ள சைபர் குற்றவாளிகள் அதிக லாபம் பெறலாம் என வெவ்வேறு வெப்சைட்டில் முதலீடு செய்ய வைத்து முதலில் லாபம் கொடுப்பதும் போல் கொடுத்து பின்னர் வெவ்வேறு காரணங்கள் கூறி அதிக பண இழப்பை ஏற்படுத்துவார்கள். பின்னர் Telegram செயலி குருப்பில் இருந்து இணைப்பை துண்டித்துக் கொள்வார்கள். இதில் படித்த இளைஞர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் தங்களது பணம் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்யலாம் 24 மணி நேரத்திற்குள் புகார் பதிவு செய்யப்பட்டால் ஏமாற்றப்பட்ட பணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது . இதுபோன்ற சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் .