கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காதர் மஹால் எதிர்ப்புறம் உள்ள வெண்ணல் வீதியில் கன மழை காரணமாக வீடு சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு

மேட்டுப்பாளையம் காதர் மஹால் எதிர்ப்புறம் உள்ள வெண்ணல் வீதியில் பலத்த மழை காரணமாக வீடு சுவர் இடிந்து விழுந்தது மூன்று தினங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மழையின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது மேலும் கனமழையால் காதர் மஹால் அருகில் உள்ள வெண்ணல் வீதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரது வீடு பின்புறம் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது இதனால் மேற்கூறையும் சேதம் அடைந்தது மேலும் அருகில் வசித்து வரும் அண்டை வீட்டார்கள் சுவர் விரிசல் விட்டுள்ளது இதனால் செய்வதறியாமல் திகைத்த குடியிருப்பு வாசிகளை உடனடியாக நகர மன்ற உறுப்பினர் ஸமீனா பேகம் அப்துல் ஹக்கீம் சந்தித்து
மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் யாசர் அராபத் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார், இரவு நேரம் என்பதால் பொதுமக்களை தங்க வைப்பதற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய வட்டாட்சியர்,
காதர் மஹாலில் தங்க வைத்தார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தமேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையளர் அமுதா
மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி
மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி ஆகியோர் காதர் மஹாலில் தங்க வைக்கப்பட்ட குடியிருப்பு வாசிகளை சந்தித்து விவரங்களை கேட்டு அறிந்தனர்
நகர மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி காதர் மஹாலில் தங்க வைக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், உட்பட 25க்கும் மேற்பட்ட குடியிருப்பு இருப்புவாசிகளுக்கு தங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்தார், முன்னதாக இவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது