புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. வேங்கைவயலில் மேல்நிலை நீர் தொட்டியில் 2022 டிச.26ல் மனிதக் கழிவு கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு 4 கட்டங்களாக ...

சூலூர் இரண்டாவது வார்டு அண்ணாமலை தேவர் சந்துப் பகுதியில் குடியிருக்கும் அருணாச்சலம் என்பவர் துடைப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்பவர். அவர் நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு தேனீர் குடிப்பதற்காக கடைக்கு சென்று விட்டார் .அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் நெருப்பு அருகில் இருந்த பழைய குப்பைகள் துடைப்பத்தின் மீது பட்டு பற்றி எரிந்தது ...

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் .இவர் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓரிரு நாட்களில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறும். ...

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒளிபரப்ப காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட எல்இடி திரை அனுமதி பெறாததால் அகற்றப்பட்டதாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.அயோத்தி கோயில் ...

தஞ்சாவூர்:  மூளையில் ரத்த குழாய் வெடிப்பால் கோமாவில் இருந்த பெண் நோயாளியை தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் நுண்ணறிவு அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் முதுநிலை நிபுணர் டாக்டர். என். அருண்குமார் தலைமையில் மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் கூறியதாவது: சுமார் ...

செம்பட்டி அருகே திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காரும், அரசு பேருந்தும்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியானார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியிலிருந்து  திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி ...

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4 -வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குளம் காமராஜர் நகரைச் சேர்ந்த சுரேந்தர் மகன் அஸ்வந்த் வயது (4) இப்பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் யு கே ஜி பயின்று வந்தார். அந்த சிறுவனுக்கு கடந்த பத்து தினங்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து ...

கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க ஒருபெண் நிர்வாணமாக சத்தமிட்டபடியே நடுரோட்டில் ஓடினார். இதை பார்த்த அங்கே நின்று கொண்டிருந்தவர்கள், கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் பின்னால் துணிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் அந்த பெண்ணை பிடிக்க முடியவில்லை. உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ...

திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகள் உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை ...