கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். ...
புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி, எம்பிக்கள் இருந்த பகுதிக்குள் குதித்த 2 நபர்கள் கலர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 59) இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. ...
கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கை கோள் சேவைகள் (GMPCS) பெற விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இத்தகைய உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங் பெறும். ஏற்கனவே இந்தியவில் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான ...
நீலகிரி மாவட்டத்தில் உறைபனியால் மூடப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான அவலாஞ்சியில் இன்று காலை 0 டிகிரி வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைகுந்தாவில் 1 டிகிரி செல்சியஸ், உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ். நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் குளிர் சீசன் தொடங்கும் . கடந்த ஆண்டில் ...
புதிய வரி விகிதங்கள் கடந்த 22-ந்தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியள்ளது … தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியானது தற்போதுள்ள 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்து உள்ளது. இதன்படி, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான நாணயங்கள் மீது ...
கோவை சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மனோஜ் சிதியா.இவரது மனைவி ஜெய சிதியா (வயது 49) இவர் ஒப்பணக்கார வீதியில் கடந்த 23 ஆண்டுகளாக ரெடிமேடு துணி கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். 22 ஆம் தேதி நரேந்திர குமார் என்பவர் ஜெயசிதியாவுக்கு போன் ...
நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருநாள், நாளை மறுநாள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா ஆகிய 2 தினங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. ...
திண்டுக்கல் சந்தைக்கு வழக்கத்தைவிட சின்ன வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய வெங்காயச் சந்தை திண்டுக்கல்லில் உள்ளது. தென் மாவட்ட அளவில், திண்டுக்கல் சந்தையிலிருந்துதான் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சந்தை 115-க்கும் மேற்பட்ட மண்டிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 ...













