LED திரை ஏன் அகற்றபட்டது – காஞ்சிபுரம் எஸ்.பி.விளக்கம்.!!

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒளிபரப்ப காமாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்ட எல்இடி திரை அனுமதி பெறாததால் அகற்றப்பட்டதாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறக்கப்பட்டு பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.அயோத்தி கோயில் திறப்பு விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டுள்ளது. இதற்க்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழாவை ஒளிபரப்ப வைக்கப்பட்ட எல்இடி திரை அகற்றபட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களோடு சேர்ந்து நிகழ்வை எல்இடி திரையில் காணவிருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிறப்பு பூஜை, பஜனை, அன்னதானத்திற்கு தடை இல்லை. எல்இடி திரை மூலம் ஒளிபரப்ப அனுமதி கேட்கவில்லை; அனுமதி கேட்கும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்..