வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவை மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் .இவர் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓரிரு நாட்களில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறும்.