விருதுநகர்: மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமியை தரிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி சிவாலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று ...
சென்னை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடக்கும் 86-வது ஆண்டு சமய வகுப்பு மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி கொடைவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலின் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் தெய்வசிகாமணி.இவர் வடக்கு மணடலத்துக்கு திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தெற்கு மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார். கோவை மாநகரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்களுக்கு இன்னும் காவல் நிலையங்கள் ஒதுக்கப்படவில்லை.. ...
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் ,ராமசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 38) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நஞ்சுண்டபுரம் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை கொள்ளை ...
தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி .அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ” வரும் முன் காத்தல்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன்படி கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் கைதிகளுக்கு ரத்த அழுத்தம் ,சர்க்கரை, இ.சி.ஜி .உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.நோயால் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பள்ளபாளையம், பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சசிவர்ணம் (வயது 53 )அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள எல்.அன்டிபைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதியது. இதில் சசிவர்ணம் ...
கோவை பீளமேடு, ஹட் கோ காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19) சூலூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை சாய்பாபா காலனி நாக முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளது. இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து ...