கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பள்ளபாளையம், பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சசிவர்ணம் (வயது 53 )அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள எல்.அன்டிபைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதியது. இதில் சசிவர்ணம் படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து அவரது மகன் கவுதம் சூலூர் போலீசில்புகார் செய்தார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் சேவூரை சேர்ந்த ஜீப் டிரைவர் சந்திரன் (வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
Leave a Reply