கோவை அருகே உள்ள வெள்ளலூர் ,ராமசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 38) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நஞ்சுண்டபுரம் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை கொள்ளை அடித்தார்.இதை பார்த்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து போத்தனூர் செட்டிபாளையம் ரோடு, ஈஸ்வரன் நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது 24) என்பவரை நேற்று கைது செய்தனர்..
Leave a Reply