தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி .அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ” வரும் முன் காத்தல்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன்படி கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் கைதிகளுக்கு ரத்த அழுத்தம் ,சர்க்கரை, இ.சி.ஜி .உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கு சிறை மருத்துவமனையில் , மாத்திரைகள் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சூப்பிரண்டு ஊர்மிளா மற்றும் அதிகாரிகள் செய்திருந்தனர்.
Leave a Reply