திருப்பதி: சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ரூ.1,530 கோடியில் செயல்படுத்த டெண்டர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் திருப்பதிக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் எளிதாக போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்யலாம். ஆந்திர மாநிலத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்று ...

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். ...

இன்று 2வது நாளாக பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ...

சென்னை: நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடுவதை காலை உணவுத் திட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது. வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும் ...

நீலகிரி மாவட்ட உதகை நகரின் முக்கிய சாலையான எட்டின்ஸ் சாலையில் பழைய பால்டெய்ரி அருகே PNR லாட்ஜின் முகப்பு பகுதியில் பெரிய கால்வாயில் சேறும் சகதியும் முட்புதர்களும் மண்டிக்கிடந்து மழைக்காலங்களில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மத்திய சாலையிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அங்குள்ள கடைக்காரர்களுக்கும் மிகவும் இடையூராகவும் பாதிப்பாகவும் இருந்ததை அப்பகுதி நண்பர்கள் தெரிவித்தனர். உடனே ...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியைபாலியல் வன்புணர்ச்சி செய்த பொன்னுசாமி (வயது 53) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ...

கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்களின் சொத்துக்களை தவறுதலாக தமிழ்நாடு வக்பு வாரியத்தின் என பொது மக்களின் சொத்துக்களை பத்திர பதிவு செய்ய முடியாமல் பல மாதங்களாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் இந்த நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு சொந்தமான எந்தெந்த சொத்துக்கள் கண்டறியப்பட்டு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்களின் பத்திர பதிவு தடை ...

கோவை அருகே உள்ள மதுக்கரை ஐயப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் உதயகுமார் .இவரது மகன் தினேஷ் (வயது 23) இவர் நேற்று கொச்சி- சேலம் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் அங்குள்ளதனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற கியாஸ் லாரி மீது பைக் மோதியது. இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். ...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரம்பலூரை சேர்ந்தவர் ஆனந்தன் இவரது மகள் இசையரசி (வயது 19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்..கடந்த 6-ந் தேதி தனது ஊருக்கு செல்வதற்காக அவரது உறவினர் ஒருவர் அவரை ரயில் நிலையத்தில் கொண்டு போய் விட்டார். ஆனால் இசையரசி ஊருக்கு செல்லவில்லை ...

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் பத்மநாபன் ( வயது 36) நேற்று இவர் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது . இதில் பத்மநாபன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக ...