பல சவால்களை கடந்து வந்தவர் தான் விஜய் அண்ணா – சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்

தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காகவே தவெகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பதால், அ.தி.மு.க-வின் எந்தவொரு பிரிவையும் இந்த புதிய அரசில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.அ.தி.மு.க-வைச் சேர்த்துக் கொள்வது புதிய அரசின் இமேஜுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தவெக தோழமைக் கட்சிகளின் ‘எய்ட் அண்ட் அசிஸ்டென்ஸ் மூலமாகவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்த முடியும். – காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம்

விஜய் அண்ணாவின் இந்த வெற்றி மிக முக்கியமான ஒரு வரலாற்று வெற்றியாகும். அவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று மக்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். விஜய் அண்ணாவிற்கும், அவரது தவெக தொண்டர்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பல சவால்களைக் கடந்துதான் இந்த நிலைக்கு வந்துள்ளார், இனிமேலும் சவால்கள் வரக்கூடும். ஆனால், மக்கள் மத்தியில் அவர் தனது சிறப்பான ஆட்சியை நிச்சயம் வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக உள்ளது. – சௌந்தர்யா ரஜினிகாந்த்

எடப்பாடி எவ்வித விசாரணையும் இன்றி கட்சியினரை நீக்கியுள்ளார். இப்படி முக்கியப் புள்ளிகளை எல்லாம் நீக்கிவிட்டு அவர் யாரை வைத்து, எப்படி கட்சியை நடத்தப் போகிறார். நீக்கப்பட்டவர்கள் அனைவரும் தொண்டர்களுக்காக உழைத்தவர்கள். இந்த நீக்கம் சட்டரீதியாகச் செல்லாது என்று சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துத் தெரிவித்துள்ளனர் என அதிமுக எம்.எல்.ஏ கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் செய்தியாளர்களிடம், “இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் மேற்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.