ராமேஸ்வரத்தில் கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தனியார் மஹாலில் உணவகம் உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி லிங்கவேல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்தில்
உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு(Self Audit Form) படிவத்தை ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் விண்ணப்பித்து சமர்பிக்க வேண்டும்
கடைகளில் கொசு ஒழிப்பு மேற்கொண்டு டெங்கு போன்ற நோய்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டும் கடைகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களான தண்ணீர் தேங்கக் கூடிய பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
உணவு கடைகளில் பணிபுரியும் வேலையாட்கள் சுத்தமாக பணி மேற்கொண்டு சுகாதாரம் பேணுதல் வேண்டும் சுகாதாரமான முறையில் உணவகங்கள் செயல்படுவதை உணவக உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும் நெகிழி பொருட்கள் கடைகளில் விற்பனை தவிர்க்க வேண்டும்உணவு திண்பண்டகளில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மக்களுக்கு வழங்க வேண்டும் உணவு பொருட்களை தினந்தோறும் காலாவதி தேதி சரிபார்த்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் மேலும் உணவு பொருட்களில் காலாவதி தேதி முடிந்த உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தேதி முடிவடைந்தால் விரைவில் உணவக உரிமையாளர் உரிமத்தை புதுப்பித்தல் வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை உணவக உரிமையாளர்கள் பின்பற்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர் . இக்கூட்டத்திற்கு ராமேஸ்வரம் உணவக உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்..