கோவையில் இந்த ஆண்டு சாலை விபத்தில் மட்டும் 204 பேர் உயிரிழப்பு..

கோவையில் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது வாகனம்  மோதி விபத்து ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 21 மாதங்களில் 110 பேர் இறந்துள்ளனர். இதில் கடந்த ஆண்டு 72 பேர், இந்த ஆண்டு 38 பேர் என மொத்தம் 110 பேர் இறந்துள்ளனர்..பஸ் மோதி விபத்தில் 22 பேரும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் மோதியதில் 20 பேரும், சரக்கு வாகனம் மோதியதில் 14 பேரும் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் 9 பேரும் இதர வாகனங்கள் மோதியதில் ஒருவரும் , இரு சக்கர வாகனங்கள் மோதியதில் 44 பேரும் இறந்துள்ளனர் .கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் 273 பேர் இறந்தனர். இந்தாண்டு இதுவரை விபத்தில் 204 பேர் இறந்துள்ளனர். இந்த தகவலை கோவை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..