மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தயிர் பாக்கெட்டுகளில் தஹி என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியது. அதன்படி, தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியது. ...
புதுடெல்லி: நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி சர்ப்ரைஸ் விசிட் மேற்கொண்டு, பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் கவுன்சில் ஹவுஸ் என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், வைஸ்ராய் லார்ட் இர்வினால் கட்டப்பட்டது. இது, சுமார் 96 வருடங்களுக்கு முன் ...
அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், ...
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி கெம்பநாயக்கனூர் மலை கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் மூர்த்தி (25). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் வீட்டில இருந்து கொண்டு மாடு மேய்ப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மூர்த்தி தனது கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியின் பின்புறம் உள்ள ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலத்துக்கோம்பை காலனியைச் சேர்ந்தவர் கிட்டான் (65). கூலித்தொழிலாளியான இவர் ஏழு வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள காலியிடத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் திடீரென ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் வனப்பகுதியில் வனச்சரகர் தினேஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. ஏதாவது வனவிலங்குகள் இறந்து கிடக்கிறதா என வனத்துறையினர் தேடிப் பார்த்தபோது அங்கிருந்த ஓடையின் கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்ததை ...
கோவை பீளமேடு, மல்லி கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் கீதா ( வயது 47) இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று இவரது பியூட்டி பார்லருக்கு 3 பெண்களும் ,ஒரு ஆணும் சென்றனர் . அவரிடம் தங்கள் பியூட்டி பார்லரில் தகாத செயல்கள் நடைபெறுவதாக கூறி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். ...
கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
கோவை: தமிழ்நாடு அரசு நேற்று பிறப்பித்த உத்தரவின் மூலம் 14 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள்,போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றனர். அதன்படி நீலகிரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த மோகன் நவாஸ் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு 64 ...













