கோவை தியாகி குமரன் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் அருகே மாநகராட்சி பார்க்கிங் உள்ளது. இங்கு 74 இருசக்கர வாகனங்களும் 4 ஆட்டோக்களும் பல நாட்களாக கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் லதா சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை ஆகியோர் சென்று அந்த வாகனங்களை கைப்பற்றினார்கள். இந்த வாகனங்கள் ...

கோவை சூலூர் அருகே உள்ள சந்தமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் .இவரது மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே கடந்த 22ஆம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக வாய் தகறாறு ஏற்பட்டது .இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் சுல்தான் ...

கன்னியாகுமரி பகுதியில் பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரின் மகனுக்கு ஆவணியில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நான்கு பேர் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ...

சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...

பாகிஸ்தானில் கடுமையான உணவு தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களுக்கு பொது மக்கள் அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ...

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கவில்லை என மத்திய அரசை கண்டித்து, 2 நாள் தர்ணாவை நேற்று (மார்ச் 29) மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துவக்கினார். மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு எந்தவொரு நிதியையும் அளிப்பதில்லை. நாட்டிலேயே மத்திய பா.ஜ., அரசிடம் இருந்து எதுவும் பெறாத ஒரே ...

சண்டிகர்: மறைந்த நடிகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் டி’ ஆகும். இந்த அமைப்பின் தலைவராக 2021-ம் ஆண்டு அம்ரித் பால் சிங் தலைமையேற்றார். மேலும், அம்ரித் பால் சிங் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து அவர் மீது தேசிய ...

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி பேருந்துகள்! விபத்துகளை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்று தர வேண்டும். திருப்பூர் மாநகரம் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாக விளங்குகிறது. இங்கு அரசு பள்ளிகளை ...

கோவை சாய்பாபா காலனி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காமராஜர் வீதியில் ஒரு பேக்கரி அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கையில் பையுடன் 3 பேர் நடந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தார் . அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் ...

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் விலகல் மற்றும் பாஜகனுடனான அதிமுக கூட்டணி தொடருமா என்று சலசலப்புகள் நிலவிவந்த நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அமித்ஷா தமிழ்நாட்டில் அதிமுகவுடனான, பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக கடந்த சில வாரங்களாக, இரு ...