கோவை கோர்ட்டுகளுக்கு வருகிற 31-ந் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்கள், கூடுதல் அமர்வு நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள், மற்றும் முன்சீப் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படும். அவசர வழக்குகள் மட்டுமே நியமிக்கப்பட்ட விடுமுறை கால நீதிபதிகளால் விசாரிக்கப்படும். அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் கோர்ட்டுகள் முழுமையாக இயங்கும்.
நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை








