இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிப்பதற்கு நீட் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போல் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல் என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.ஐ.டி.களிலும், குறிப்பிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ...
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது. இதன் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு 4 பதக்கம் வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி அணிவகுத்து சென்றனர். 12 நாட்கள் நடைபெற்ற ...
தொடர் விடுமுறை காரணமாக, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 1,42,062 பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு ...
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (35) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் ...
பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் கவர்ச்சியான ஆடைகளைக் களைந்து மேலும் உறுதியானதாக மாறியுள்ளது. ஐந்தாண்டு கால சர்வதேச போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, போப் பிரான்சிஸ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோர் அடங்கிய குழுவை ஐ.நா அமைப்பிற்கு முன்மொழியப்போவதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் ...
கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது. புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி (வயது 23) என்பவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு ...
சென்னை: ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆதரவான விளம்பரங்களில் நடிகர் சரத் குமார் நடிக்க வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து ...
கோவையில் முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்கள் கைது கோவையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து முதியவரை கட்டிப்போட்டு திருட முயன்ற காதலர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையத்தை சேர்ந்தவர் பெரிய ராயப்பன்,76. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொம்மணம்பாளையத்தில் பெரிய ராயப்பனும் அவரது மனைவி மட்டுமே ...
பிரதமரின் அறிவுறுத்தலின்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு தேசிய கொடி ஏற்றியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இல்லம்தோறும் மூவர்ண கொடி பரப்புரையின் கீழ் பொதுமக்கள் வீடுகளில் கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ...
கோவை: நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து ...













