போக்சோ வழக்கில் கைதான வாலிபருக்கு16 வருடம் சிறை தண்டனை..!

கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 16 வயது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பெறப்பட்டது. புகாரின்
பேரில் கடந்த 2018-ம் ஆண்டு பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்
அமுதா வழக்குப்பதிவு செய்து கருப்புசாமி (வயது 23) என்பவரை கைது செய்து
போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு கோவை மாவட்டம்
போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கின்
விசாரணை முடிவடைந்தது. அதில் கருப்புசாமிக்கு 16 வருடம் சிறை தண்டனை
மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறந்த முறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி மற்றும் போலீஸ்
ஆனந்தி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்.