சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்கர்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், ...
கோவை போளுவம்பட்டி வனப்பகுதியில் உடல்நல குறைவால் அவதிப்படும் 8 வயது பெண் யானைக்கு, கால்நடை மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் போளுவம்பட்டி வனச்சரகம் முள்ளாங்காடு தாணிக்கண்டி வனப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, 8 வயது பெண் குட்டியானை உடல்நல குறைவினால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர்.இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ...
அந்தமான் நிகோபார் தீவில் மேற்கொள்ளப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக நேற்று சோதனை செய்துள்ளது.ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் பிற பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை ...
புதுச்சேரி: 6 டன் எடையுள்ள பாறையை குடைந்து மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் காலமானார். காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் உருவாக்கி வருகிறார் ...
சென்னை : போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பார்த்து பாராட்டி ஆட்சியரின் 6 வயது மகள் பரிசளித்த சம்பவம் சக காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ்(44). இப்பகுதியில் அதிகளவில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் ...
1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நூறாண்டுகளைக் கடந்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த எஞ்சினுக்கு ஓய்வு வழங்கப்பட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதன் திறன் குறித்தும், பழுதற்று செயல்படும் தன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் இந்த எக்ஸ் க்ளாஸ் ...
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்தது. ராகுல் காந்தி நூலை வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இந்நூலில் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்கள், இளமைப்பருவம், ஆரம்பநிலை அரசியல் பங்களிப்பு, திருமண ...
கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. திமுக பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், அதிமுக ...
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் விவ காரத்தை தொடர்ந்து இந்து – முஸ்லிம் சமூகத்தினரிடையே விரிசல் அதிகரித்துள்ளது. முஸ்லிம் கடைகளில் இந்துக்கள் பொருட்களை வாங்க கூடாது என இந்துத்துவ அமைப்பினர் சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்துக்களை எதிர்க்கும் முஸ்லிம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிக்க வேண்டும், கோயில் விழாக்களில் கடைகள் அமைப்பதற்கு முஸ்லிம் வியாபாரிகளுக்கு அனுமதி ...
தேனி:மதுரை – தேனி அகல பாதையில் 12 ஆண்டுகளுக்கு பின் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கவுள்ளார்.மதுரை – போடி இடையே 98 கி.மீ., துாரமுள்ள மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2011 ஜனவரியில் துவங்கியது. இத்திட்ட பணிகளுக்கு மத்தியில் முன் ஆட்சியிலிருந்து காங்., அரசு போதிய ...