கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க தடை-பொதுமக்கள் ஏமாற்றம் ..!!

கோவை நொய்யல் ஆறு சித்திரை சாவடி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை..

கோவை: மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது மழை ஓய்ந்த நிலையில், சித்திரை சாவடி தடுப்பணையில் குளிக்க உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். கோவை குற்றாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் குற்றாலம் செல்வதை தவிர்த்து விட்டு மக்கள் சித்திரை சாவடி அணைகட்டுக்கு அதிக அளவில் வந்த கொண்டு இருக்கின்றனர். சித்திரை சாவடி அணைக்கட்டு தற்போது தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் அதிக ஆளம் ஏற்பட்டுள்ளது. இதனை தெரியாமல் குளிக்க வருபவர்கள் அணையில் குதித்து குளித்து வந்தனர். கடந்த ஞாயிறு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் தொண்டாமுத்தூர் போலீஸ் சார்கில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.

அதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குளித்து வந்தனர். எனவே தொண்டாமுத்தூர் போலீசாரின் அறிவுறுத்தலின் படி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அணைக்கட்டுக்குச் செல்லும் வழியில் இரும்பு கேட் அமைத்து பூட்டு போடப்பட்டு தடை விதித்துள்ளது. இதனால் சித்திரைசாவடி அணைக்கட்டுக்கு குளிக்க வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.