மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை

கோவை அடுத்த சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). பெயிண்டர். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியின் வீட்டிற்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்தார். பின்னர் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் 2 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை இதையடுத்து மாணவியின் பெற்றோர் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் சுபாஷ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.