கோவை: கோவை அருகே உள்ள நீலாம்பூர் மயிலம்பட்டி , ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் .இவரது மகள் அகன்சா ( வயது 23) எம் எஸ் சி பட்டதாரி. நேற்று இவர் நீலம்பூரில் உள்ள ஒரு கடைக்கு சாமான்கள் வாங்க ஸ்கூடடரில் சென்றார். வாங்கி விட்டு திரும்பி வரும் போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணம், ஒரு செல்போன், ஒரு கைக்கடிகாரம் ஆகியவற்றை மிரட்டி கொள்ளடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு செய்து கொள்ளையாகளை தேடி வருகிறார்கள்.
Leave a Reply