கோவையில் ஒரே நாளில் 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை சூலூர் பக்கம் உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் இவரது மகள் சிந்து ( வயது 26 )பி.ஏ .பட்டதாரி.இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் ஜெயந்தி சூலூர் போலீஸ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சிறுமுகை வட பகுதூரைச் சேர்ந்தவர் ஜெயராமன் ( வயது 76) இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயராமன் நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது மகன் ரமேஷ் சிறுமுகை போலீசில் புகார் செய்துள்ளார்.

இதேபோல கிணத்துக்கிடவு மணிகண்டாபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி, இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 72 )இவர் கடந்த 15 ஆண்டுகளாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த விஜயலட்சுமி நேற்று அங்குள்ள ஒரு ஆழமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.