கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்,சப் இன்ஸ்பெக்டர் சாய்னா பானு ஆகியோர் நேற்று இரவு ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 170 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தெலுங்குபாளையம் எல்.ஐ.சி .காலனி பாரதி ரோட்டை சேர்ந்த குமாரவேல் மகன் ரோகித் வர்ஷி (வயது 24 )என்பது தெரியவந்தது. ஆந்திராவை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த போதை மாத்திரைகளை கொண்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
Leave a Reply